(Image:https://www.freepik.com/premium-ai-image/baby-lord-rama-with-bow-arrow_152334143.htm)
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
வானகம்மும் மண்ணகம்மும்
வெற்புமேழ்க டல்களும்,
போனகம்செய் தாலிலைத்து
யின்றபுண்ட ரீகனே,
தேனகஞ்செய் தண்ணறும்ம
லர்த்துழாய்நன் மாலையாய்,
கூனகம்பு கத்தெறித்த
கொற்றவில்லி யல்லையே? 30
பொருள்
“தேவலோகதில் உள்ளோர்களும். பூலோகத்தில் உள்ளோர்களும் ஏழு கடல்களும், ஏழு மலைகளும் உள்பட, அனைத்தையும் உண்டாய், தாமரைக் கண்கள் கொண்ட வடபத்ரஸாயியே, சிறுவனாய் கூனியின் கூனை உள்ளே தள்ள களிமண் வைத்த அம்பேய்த கோதண்டராமனும், தேனோழுகும் குளிர் துளசி மாலை அணிந்த பெருமாளும் நீ தானே?
விளக்கம்
போன பாசுரத்தில் பெருமாள் எடுக்கும் அவதாரங்களை குறிப்பிட்ட ஆழ்வார், இந்த பாசுரத்தில் இரண்டு அவதாரங்களை இணைத்து அவையும் அவனே என்று கோடு இடுகிறார்.
வானகம்மும் மண்ணகம்மும்: சுவர்கமும் அதில் வாழும் இந்திரன் போன்ற ஆத்மாக்களையும், பூமியும் அதில் வாழும் உயிர்களையும் ..
வெற்பும் ஏழ் கடல்களும்: ஏழு மலைகளையும், ஏழு கடல்களையும் ...
(இதை “ஏழு வெற்பும்”, “ஏழு கடல்களும்” என்று கூட்டிப் படிக்க வேண்டும்.) (வெற்பு = மலை)
ஏழு மலைகளென்றால் (குல பர்வதங்கள்):
1. மஹேந்தர பர்வதம்
2. மலய பர்வதம்
3. ஸாஹ்ய பர்வதம்
4. சக்திமான் பர்வதம்
5. ரீக்ஷா பர்வதம்
6. விந்திய பர்வதம் மற்றும்
7. பரியத்திர பர்வதம்
.
ஏழு கடல்கள் கீழே வருமாறு:
1. ஜம்பூ த்வீபத்தைச் சுற்றி இருக்கும் உப்புக் கடல் (லவண சமுத்திரம்)
2. ப்ளக்ஷ த்வீபத்தைச் சுற்றி இருக்கும் கரும்புச் சாறு கடல் (இக்ஷு சமுத்திரம்)
3. ஷால்மல த்வீபத்தைச் சுற்றி இருக்கும் மதுக் கடல் (ஸுர சமுத்திரம்)
4. குஷ த்வீபத்தைச் சுற்றி இருக்கும் நெய்க் கடல் (க்ரிதத சமுத்திரம்)
5. கிரௌஞ்ச த்வீபத்தைச் சுற்றி இருக்கும் தயிர்க் கடல் (தத்யோத சமுத்திரம்)
6. ஷாக த்வீபத்தைச் சுற்றி இருக்கும் பாற்கடல் (க்ஷீர சமுத்திரம்)
7. புஷ்கர த்வீபத்தைச் சுற்றி இருக்கும் இனிப்பு கடல் (ஸ்வதுதாக சமுத்திரம்)
போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே: மேலே கூறப்பட்ட அனைத்தையும் உண்டு அவற்றை காத்து விட்டு, ஆலிலை தளிர்மேல் உறங்கிய தாமரை போன்ற கண்களை உடையவனே ...
பெருமாளுக்கு தவறாகப் புரிந்துகொள்ள முடியாத அடையாளமாக கூறப்படுவது அவனின் இந்த தாமரை போன்ற கண்களே என்று பல ஆச்சார்யர்கள் கூறுகின்றனர். இது வராக அவதாரத்திற்கும் பொருந்தும்! (போனகம் = உண்டு)
கடோபஷினத் (1-2-25) கூறுவது “யாருக்கு பிராமணர்களும், க்ஷத்ரியர்களும் உணவோ; யாருக்கு மரணம் ஒரு ஊறுகாயோ ...” அவனே பிரஹ்மம். (“यस्य ब्रह्म च क्षत्रं च उभे भवत ओदनः । मृत्युर्यस्योपसेचनं क इत्था वेद यत्र सः ॥/ யஸ்ய ப்ரஹ்ம ச க்ஷத்ரம்ʼ ச உபே பவத ஓதன꞉ ம்ருʼத்யுர்யஸ்யோபஸேசனம்ʼ க இத்தா வேத யத்ர ஸ꞉”)
(यस्य (yasya) – to whom, ब्रह्म (brahma) – the Brāhmaṇa, च (ca) – and, क्षत्रं (kṣatraṃ) – the Kṣatriya, च (ca) – also, उभे (ubhe) – both, भवतः (bhavataḥ) – are, because, ओदनः (odanaḥ) – food, मृत्युः (mṛtyuḥ) – death, यस्यः (yasyaḥ) – to whom, उपसेचनं (upasecanaṃ) – condiment (curry or pickle), कः (kaḥ) – who, इत्था (itthā) – thus, वेद (veda) – knows, यत्र (yatra) – where, सः (saḥ) – he is, ) https://shlokam.org/texts/katha-1-2-25/
தேன் அகம் செய் தண் நறு மலர்த் துழாய் நன் மாலையாய்: உள்ளுக்குளே தேனோழுகும், குளிர்ந்த நல்ல துளசி மாலையை அணிந்திருக்கும் நாராயணனே! ஆலிலை மேல் படுத்திருப்பவனும் நீதானோ?
(தண் = குளிர்ந்த)
கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?: இராமயணம் துவங்க காரணம், கூனி. அவளுக்கு இராமன்மேல் காழ்ப்பு வரக் காரணம் அவன் சிறு வயதில் அவளது கூன் உள்ளே செல்லும் விதமாக தன் அம்பின் நுனியில் களிமண்ணை வைத்து பானமெய்ததே. அதில் தொடங்கிய கதை, இராமன் சிறந்த வில்லாளியாகி இராவணனை வென்றதில் முடிந்தது.
(கொற்ற = வெற்றி; வில்லி =வில்லாளி)
ஆலிலைக் கண்ணனும் இராமனும் வெவ்வேறு அவதாரங்களனாலும், ஆழ்வார் இரண்டுமே துளசி மாலையணிந்த பரமாத்மாதான் என்று கண்டுகொள்ளக் காரணம் அவனின் தாமரைக் கண்களே!

