திருச்சந்த விருத்தம் 11/762: சொல்லினால் தொடர்ச்சி நீ
யாராலும் உன் குணங்களைச் சொல்ல முடியாது
ஒலி
(ஒலி திரு K மாலோல கண்ணன் & NS ரங்கநாதன் அவர்களின் திருசந்தவிருத்தத்திலிருந்து)
சொல்லினால்தொ டர்ச்சிநீ
சொலப்படும்பொ ருளும்நீ,
சொல்லினால்சொ லப்படாது
தோன்றுகின்ற சோதிநீ,
சொல்லினால்ப டைக்கநீப
டைக்கவந்து தோன்றினார்,
சொல்லினால்சு ருங்கநின்கு
ணங்கள் சொல்ல வல்லரே? 11
பொருள்
“வேதங்கள் கூறும் புருஷார்த்தங்களின் மேல் மனிதர்களுக்கு பற்று உண்டாக காரணன் நீ. அவை கூறும் ஆதிமூலமும் நீயே. வார்தைகள் திணறும்போது உணரப்படும் உண்மை நீ. வேதங்களை உரைத்து அண்டத்தை படைக்கும் பிரம்மனையும் மற்ற தேவதைகளயும் படைத்தாய் நீ. அவனாலும் உன் குணங்களை சுருக்கமாவும் சொல்ல முடியுமோ?”
விளக்கம்
ஆழ்வார் போன பாசுரதில் பெருமாளே உபாதன காரணம் என்று கூறினார். ஆனால், மற்ற ப்ரமாணங்கள் சிவனோ பிரம்மாவோ தான் உபாதன காரணம் என்று கூறுவது போல் உள்ளதே? உதாரணமாக, “ஸ்வேதாஸ்வத்தர உபனிஷத் “எங்கும் இருள் சூழ்ந்திருக்கையில், இரவும் பகலும் இல்லா காலத்தில், சிவன் மட்டுமே இருக்கிறான். அவனுக்கு அழிவில்லை” (“யதா தமஸ் திவோ ந் ராத்ரிர் ந ஸ்ந்ந சாஸ்ச் சிவ ஏவ கேவல”/ यदाऽतमस्तन्न दिवा न रात्रिर्न सन्न चासञ्शिव एव केवलः । तदक्षरं तत्सवितुर्वरेण्यं प्रज्ञा च तस्मात्प्रसृता पुराणी ॥१८॥ 4.18) (https://incarnateword.in/cwsa/18/svetasvatara-upanishad#!)) என்று கூறுகிறதே?”, என்ற கேள்விக்கு, அந்த தெய்வங்களுக்கும் அவனே மூலம் என்று பதிலளிக்கிறார், இந்த பாசுரத்தில்.
சொல்லினால் தொடர்ச்சி நீ: வேதங்கள் புருஷார்த்தங்களாக அறம், பொறுள், இன்பம், வீடு ஆகியவற்றை கூறுகின்றன. இவற்றின்மீது நாட்டம் வருவதற்கே பெருமாளின் அனுக்கரஹம் வேண்டும். அந்த ஆவலை தூண்ட அவனே கரணம்.
சொலப்படும் பொருளும் நீ: அந்த வேதங்களும், ஸ்ம்ருதிகளும், இதிகாசங்களும், புராணங்களும் உணர்த்தும் பரம்பொருளும் நீயே. நீதான் பிறர் வணங்கும் தேவதைகளுக்குள் இருக்கும் அந்தராத்மா. அவர்களின் இச்சைகளை நிறைவேற்றுபவனும் நீதான்.
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ: கேன உபனிஷத் கூறுவதாவது “ப்ரஹ்மம் புரியவில்லை என்று தெரிந்தவனுக்கு ப்ரஹ்மம் புலப்படுகிறது. யார் தனக்கு ப்ரஹ்மத்தை தெரியும் என்று நினைக்கிறானோ, அவனுக்கு ப்ரஹ்மம் என்ன என்று புரியாது. ப்ரஹ்மம் புரிந்தால் புரியாது; புரியாதென்றால், புரியும் (எனக்கு க்வாண்ட்டம் ப்சிக்ஸ் (Quantum Physics) ஞாபகம் வருகிறது!) (“ யஸ்யா மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதஸ: அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதம் அ விஜாநதாம் / यस्यामतं तस्य मतं मतं यस्य न वेद सः ।
अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम् ॥ ३ ॥) இப்படி சொற்கள் எட்டாத இடத்தில் இருப்பவன் நீ. சொற்கள் தோற்கும் போது உணாரப்படும் ஒளிமயமான ஜோதி நீ.
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்: ஸ்வேதாஸ்வத்தர உபனிஷத் சொல்கிறது: “எந்த பரம்பொருள் ஆதியில் பிரம்மனை படைத்து வேதங்களை கற்பித்தானோ அவனிடம் மோக்ஷத்தை நாடி நான் சரணடைகிறேன்” (யோ ப்ர்ஹ்மனம் வித்தாதி பூர்வம் யோ வை வேதம்ச ப்ரஹினோதி தஸ்மை. தம் ஹ தேவம் அத்மபுத்தி ப்ரகாஸம் முமுக்ஷுர்வை சரணம் அஹம் ப்ரபத்தயே / यो ब्रह्माणं विदधाति पूर्व यो वै वेदांश्च पहिणोति तस्मै । तं ह देवं आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये ॥ 6.18) என்கிறது. அந்த பரம்பொருள் நாராயணனே. அவன் வேதங்களை உரைத்து லோகத்தை படைக்க பிரம்மனை தோற்றுவித்தான். மற்ற தேவதைகளும் அவ்வாறே தோன்றினர்.
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே: இப்படி நீ தோற்றுவித்தவர்கள் உன் குணங்களை விரிய சொல்வதென்ன, சுருங்கக்கூட சொல்ல இயலாதவர்கள்.


உறைத்த -> உரைத்த.
Quantum physics and dual theory etc all try and explain a tiny bit of what our scriptures say. As a student of Physics I have no qualms in saying this.